search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா அல்ட்ரோஸ்"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவந்த எக்ஸ்.எம். வேரியண்ட் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிதாக எக்ஸ்.இ. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.54 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. காரின் மேல் அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்.இ. பிளஸ் மாடல் விலை எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவு ஆகும். 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

    இம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.

    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.


    அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: carwale
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors



    இந்திய சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றன. மேலும், ஒருசில நிறுவனங்கள் விரைவில் இது சார்ந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. 

    இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் காரில் தற்சமயம் நெக்சான் காரில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என்ஜினின் டி-டியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதன் காரணமாக அல்ட்ரோஸ் காரின் செயல்திறன் குறையும். டி-டியூன் செய்யப்பட்ட என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர், 210 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்றும் இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும் என தெரிகிறது. நெக்சான் காரில் இருக்கும் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.



    முன்னதாக வெளியான தகவல்களில் டாடா அல்ட்ரோஸ் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இந்த காரில் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் புதிய டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, ஹூன்டாய் ஐ20 மற்றும் ஹோன்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataMotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான அல்ட்ரோஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவை மனாலியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் முதன்முதலில் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவான முதல் கார் ஆகும். இதுதவிர டாடாவின் எதிர்கால கார் மாடல்களும் ஆல்ஃபா தளத்திலேயே உருவாக இருக்கிறது.

    டாடாவின் பெரிய கார்கள் ஒமேகா தளத்தில் உருவாக்கப்படுகின்றன. இது முதன்முதலில் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் இமேபேக்ட் 2.0 வடிவமைப்பில் அறிமுகமாகும் டாடாவின் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் பயன்படுத்தப்பட்டிருந்தது.



    புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஏர்பேக், சீட்-பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹேட்ச்பேக் கார் 2019 அக்டோபரில் அமலாக இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. 

    டாடா அல்ட்ரோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    ×